மூன்று மாத கர்ப்பிணியை எவ்வாறு கவனிப்பது?
கர்ப்பம் அடைந்ததில் இருந்து முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டர் குறிப்பிடும் தேதிகளில் தவறாமல் சென்று உடல்நலனைப் பரிசோதிக்க வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் தாய்க்கு தேவையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.
டாக்டர் பரிந்துரைக்கும் போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முட்டை, பால் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாகச் சாப்பிடும் அளவை விட கொஞ்சம் கூடுதலாக, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் 8 மணி நேரத் துாக்கமும், பகலில் 1 முதல் 2 மணி நேர ஓய்வும் அவசியம்.
டாக்டரின் ஆலோசனைப்படி தினமும் 30 நிமிடம் மிதமான நடைப்பயிற்சி செய்யலாம். அதிக பளு துாக்குவதை தவிர்க்க வேண்டும்.
ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். எனவே குடும்பத்தினர் அவரை புரிந்து கொண்டு அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும்.