உங்களுக்கு ஏற்ற டிரெஸ்... தேர்வு பண்ண தெரிஞ்சா பேஷ்!

நம் நிறத்திற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால், அது நம் அழகை பன்மடங்கு அதிகரிக்கும்.

குறிப்பாக, மாநிறம் (டஸ்கி டோன் அண்ட் டார்க் டோன்) பெண்கள், சில குறிப்பிட்ட நிறங்களில் உடைகளை அணிந்தால், ஜொலிப்பார்கள் என ஆடை வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெளிர் இளஞ்சிவப்பு, லாவெண்டர், மரகத பச்சை மற்றும் ரூபி சிவப்பு போன்ற நிறங்களில், உடைகளை அணியும்போது, ஒரு தனித்துவமான அழகை தரும்.

'பிரைட்' லுக் பகல் நேர நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, நல்ல பொலிவான தோற்றம் வேண்டும் என சிலர் விரும்புவர்.

அப்படியானால், மஸ்டர்டு எல்லோ நிறத்தில், ஒரு சல்வார் அல்லது குர்தாவை அணிந்து பாருங்கள். இது உங்களை மிகவும் அழகாக எடுத்துக்காட்டும்.

ராயல் லுக் வேண்டுமா? விசேஷங்களுக்கு செல்லும் போது, ஒரு 'ராயல் லுக்' வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.

அவர்கள் காப்பர் அல்லது மெட்டாலிக் ஷேடு கொண்ட ஆடைகளை தாராளமாக அணியலாம்.

'அட போங்கப்பா, ஒரு சிம்பிள் அண்ட் எலகண்ட் லுக் போதும்', என்று நினைக்கும் பார்ட்டியா நீங்க.

உங்களுக்காகவே லைட் எல்லோ, லைட் பிரவுன் மற்றும் லிவ் கிரீன் நிறங்கள் காத்திருக்கின்றன.