முடக்கு வாதம் நோயை கண்டறிவது எப்படி?
இந்த நோய் பாதிப்பு பொதுவாக முடக்கு வாதம், சரவாங்கி, கணுச்சூளை என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்களின் விரல் மூட்டுக்கள் முதல், முழங்கால், இடுப்பு, கணுக்கால் போன்ற மூட்டுகளையும் அதன் ஜவ்வுகளையும் இந்த நோய் பாதிப்பு விட்டு வைப்பதில்லை.
மூட்டு வலி, தசை வலி, மூட்டில் இறுகும் தன்மை, சோர்வு, காய்ச்சல், ரத்த சோகை என இதன் அறிகுறிகள் பல்வேறு வகைகளில் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த வலியின் போது ஓய்வு தேவை. ஒரு வேலையை தொடர்ந்து செய்யாமல் சிறிது சிறிதாக செய்யலாம்.
யோகா பயிற்சி மூலம் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள் சாப்பிடுவதை குறைக்க முடியும்.
முடக்கத்தான் கீரை முடக்கு வாதம், கை, கால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கும் .