முதுமை என்பது பூங்காவனம் புரிந்தால் சிறகடிக்கும் மனம்!

பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி என்ற ஓட்டத்தில், பெரும்பாலானவர்கள் தம்மை தாமே மறந்துவிடுகின்றனர்.

முதுமையின் நுழைவாயில் வந்து நின்றபின்னர் தான், தம்மை சுற்றி அனைத்தும் மாறியிருப்பதை உணர்கின்றனர்.

ஆய்வுகளின் படி, 60 வயதை கடக்கும் நபர்களில், 14 சதவீதம் பேர் மனஅழுத்தம், மனஇறுக்கம், போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகளில் சிக்கிவிடுகின்றனர்.

அதன் விளைவாக, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு, முதுமை என்பது நரகமாகவே மாறிவிடுகிறது.

பொதுவாக, 40 வயதை கடக்கும் போதே, பொருளாதார ரீதியாக நம் முதுமை காலங்களை அனைவரும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள், பிள்ளைகளுக்காக மட்டும் ஓடாமல், நமக்காகவும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும்.

யோகா, நடைபயிற்சி, புத்தகவாசிப்பு, சுற்றுலா, செக்அப் ரொம்ப முக்கியம்.

ஓய்வுக்காலத்திற்கு பின், எப்படி நேரம் செலவிடலாம் என்பதிலும், திட்டமிடல் வேண்டும்.