சியா விதைகளை எப்படி சாப்பிடுவது?

சியா விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், ஒமேகா 3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

பாலுடன் அல்லது தண்ணீருடன் சியா விதைகளை கலந்து, இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

பின் காலையில் சியா விதைகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

சியா விதைகளைக் கொண்டு ஸ்மூத்திகள், ஜூஸ், புட்டிங் என உங்கள் விருப்பம் போல் உண்ணலாம். பழங்கள், நட்ஸ் சேர்த்து உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் எடை குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சியா விதைகள் சாப்பிடுவது நல்ல ஆற்றல் மற்றும் நீரேற்றத்தை தரும்.

அளவுக்கு அதிகமாக சியா விதைகளை சாப்பிட்டால் செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் அதனால் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சியா விதையை துவங்கும் போது ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடவும். பின்பு படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

டயட்டில் இருப்பவர்கள் மாலையில் இவற்றை சாப்பிடுவது நன்கு பசி தாங்கும். மேலும் இரவு உணவை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

உலகமே சந்திக்கும் முக்கிய பிரச்னையான பருவநிலை மாற்றதிற்கு காடுகள் அழிவதும் தான் காரணம் என்பதை நாம் புரிந்து கொண்டு வனங்களை பாதுக்காப்போம்!