உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
ஆரோக்கியமாக வாழ உடலுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். அதற்கு என்னென்ன சாப்பிடலாம் என அறிந்துகொள்வோம்.
காய்கறிகள், பழங்களை சமைக்காமல் சாப்பிடும் போது, அவற்றில் இருக்கும் உயிருள்ள சக்தி, சிதையாமல் கிடைக்கிறது.
இவற்றில் உள்ள ஆன்டி - ஆக்சிடென்ட், 'விட்டமின்கள் - ஏ, பி2, பி6, சி, டி' போன்றவை எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
அதிலும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் அவற்றை வழக்கமாக எடுத்துகொள்ளவும்.
பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும்; குழந்தைகளுக்கு, மழை, பனி காலங்களில் பழங்கள் தரக் கூடாது என்பது தவறான எண்ணம்; தினசரி ஒரு பழமாவது, உணவில் இடம் பெற வேண்டும்.
மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, 'கேன்சர், ஆர்த்தரடீஸ், அல்சைமர்' என்று, பல நோய்களையும் தடுக்கும்.
கார சுவையுள்ள இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பூண்டில் உள்ள, 'அலிசின்', இஞ்சியில் உள்ள, 'ஜின்சரால்' போன்ற வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை உடையவை.