பாதுகாப்பான முறையில் தண்ணீரை சேமிக்க டிப்ஸ்...

நாம் தினந்தோறும் சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்

தண்ணீரை எதில் சேமித்து வைத்தாலும், அதனை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகாமல் தவிர்ப்பது நல்லது

பலரும் பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பர். அவ்வாறு, சேமித்து வைக்கும்போது, பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

மேலும், பாட்டிலின் உள்பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது நல்லது.

தண்ணீரைக் குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் மூடி வைக்க வேண்டும்

நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், மற்றவருக்கு உங்கள் பாட்டிலை பயன்படுத்தக் கொடுக்காதீர்.

நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால், தண்ணீரின் தன்மை மாறாது.

காப்பர் பாத்திரங்களில் சேமித்த தண்ணீரை அருந்துவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன

நீங்கள் டிரம்களில் தண்ணீரை சேமித்து வைப்பவராக இருந்தால், சூரிய வெளிச்சம் படும்படி டிரம்களை வைத்து, தண்ணீரை சேமிக்க வேண்டாம் .