உடல் சூட்டை குறைக்க சுவைகள் உதவுமா?
உடல் சூட்டிற்கு காரணம், உடலில் பித்தம் அதிகரிப்பது தான். சூட்டை குறைக்க உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறுசுவைகளில் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு இந்த மூன்று சுவைகளையும் அதிகமாக சாப்பிட்டு, புளிப்பு, உப்பு, காரத்தை குறைக்க வேண்டும்.
கறிவேப்பிலை, வெந்தயம், சுண்டைக்காய், பாகற்காய் உட்பட கசப்பு சுவை உள்ள பொருட்களை உணவில் சேர்த்தால், பித்தம் குறையும்
இயற்கையான இனிப்பு சுவையுள்ள பால், நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும், 'பதிமுகம்' என்ற பொடியை, தண்ணீரில் சேர்த்து காய்ச்சினால், இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும். அந்த தண்ணீரை குடிக்கலாம்.
துவர்ப்பு சுவையுள்ள வாழைப் பூ, இளம் வாழைக்காய், வாழைத்தண்டு உள்ளிட்டவை பித்தத்தை குறைக்கும்.
இஞ்சி, பட்டை, கிராம்பு மற்றும் சுக்கு போன்ற காரமான பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது, புளித்த மாவு, தயிர், மீன், முட்டை, கோழி இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக, இவை நல்ல உணவுகள் என்றாலும், பித்த உடல்வாகு இருப்பவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டு மாமிசம், கொத்தமல்லி, சீரகம் சாப்பிடலாம்.