கோடையில் உடலை பராமரிப்பது எப்படி?
கோடை காலத்தில் உடல்சூடு அதிகமாகும். அதைத் தடுக்க பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
உணவில் மோர், தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், வெண்பூசணி சாறு, பன்னீர் திராட்சை, வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.
பட்டினி விரதம் இருக்கக் கூடாது. ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. அதிக காரம், புளிப்பு, உப்பு கூடாது.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
இரவு படுக்கும் போது கை மற்றும் கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவி மசாஜ் செய்து கொண்டு படுக்கலாம்.