நாய் கண் சிமிட்டினால்... என்ன அர்த்தம்?

வால் ஆட்டுவது, புருவங்களின் அசைவுகள் என நாய்கள் தன் உணர்வுகளை மனிதர்களுக்கு தெரிவிக்க பல வழிகளைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் வளர்ப்பு நாயின் அசைவுகள் குறித்து இத்தாலியின் பர்மா பலகலை ஆய்வு மேற்கொண்டது.

அதில், வளர்ப்பு நாயின் கண்களை நீங்கள் உற்று நோக்கும் போது, அது கண் சிமிட்டினால், உங்களிடம் ஏதோ விஷயத்தை தெரிவிக்க முயற்சிக்கிறது....

மேலும், நெருக்கமான சமூக பிணைப்பை ஏற்படுத்தவும் நினைக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில், 35 நாய்களிடம், மனிதர்களின் கண் சிமிட்டும் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன.

மற்றவர்களை விட, நாய் உரிமையாளர்கள் கண் சிமிட்டுவதை பார்த்ததும், நாய்களின் கண் சிமிட்டும் வேகம் அதிகரிப்பதை கண்டறிந்தனர்.