லைப் ஸ்டைலை மாற்றாவிட்டால் கர்ப்பகால நோய்க்கு வாய்ப்பு

கர்ப்பம் என்று பரிசோதனை செய்த உடனேயே பெரும்பாலான பெண்கள் வேலை செய்யாமல் ஓய்வெடுப்பது அறுவை சிகிச்சை வாய்ப்பை அதிகமாக்குகிறது.

பெரும்பாலான குடும்பங்களில் ஒரு குழந்தை மட்டுமே பெறுவதால் கர்ப்பமானவுடன் கூடுதல் கவனம் என வீட்டில் ஓய்வெடுக்க வலியுறுத்துகின்றனர்.

வழக்கமான வேலைகளைச் செய்ய கர்ப்பம் இடையூறாக இருப்பதில்லை. நிறைய ஓய்வு தேவை என பெற்றோர், உறவினர் நினைத்து கர்ப்பிணியை வேலை செய்ய அனுமதிப்பதில்லை.

சாப்பிடுவது, 'டிவி' பார்ப்பது, துாங்குவது என உடல் உழைப்பின்றி இருந்தால் திடீரென உடல் எடை அதிகரித்து ரத்த அழுத்தம், கர்ப்ப கால் நீரிழிவு பிரச்னைகளை உருவாக்கும்.

ஊட்டச்சத்து குறைந்த துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ரத்தசோகையை கண்டு கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை ஆகியவை சுகப்பிரசவ வாய்ப்பை குறைக்கிறது.

சிலர் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவதாலும் கர்ப்பகால ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே, சத்தான உணவும், முறையான உடற்பயிற்சியும் அவசியம்.

முதல் மூன்று மாதங்கள், 2வது, 3வது மூன்று மாதங்களுக்கு (டிரைமஸ்டர்) ஏற்ப யோகாசன பயிற்சிகளை முறையாக செய்ய வேண்டும்.