நேர்மையும் தைரியமும் இருந்தால்.. தன்னம்பிக்கை தரும் பாரதியின் வார்த்தைகள் !
வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல், மன உறுதியுடன் வாழ வேண்டும்.
உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால்.. நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்வதால் பெருமை உண்டாவதில்லை. உழைப்பினால் கிடைத்த பணமே மதிப்பு மிக்கது.
அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன உறுதி இருந்து விட்டால் மனிதன் கடவுளுக்கு நிகராகி விடுவான்.
உழைத்து வாழ்வது தான் சுகமான வாழ்க்கை. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. அதை திருத்திக் கொள்ள அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறரது துன்பத்தை தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும் ஒருவகையான தானம் தான்.
தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும், மனிதா.. நீ அச்சப்படாதே. வானம் வசப்படும் !