வங்கி கணக்கு உள்ள செல்போன் தொலைந்து விட்டால் என்ன செய்யலாம்?
உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்து, போன் தொலைந்து போய்விட்டது என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதில், மொபைல் பேங்கிங் செயலி, யு.பி.ஐ., செயலி, மொபைல் வாலட் ஆகியவற்றை செயல்படவிடாமல் தடுக்க வேண்டும்.
மேலும், உங்கள் வங்கிக் கணக்கை கவனித்துக்கொண்டே இருங்கள். ஏதேனும் தவறான பரிவர்த்தனைகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவும்.
தொலைபேசி சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு, போன் தொலைந்துவிட்டதை கூறி சேவையை தற்காலிகமாக நிறுத்தி, அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கவும்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போன் காணாமல் போய்விட்டதாக புகாரளித்து, சி.எஸ்.ஆர்., பிரதியேனும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இவற்றை
செய்யும்போதே, உங்கள் வங்கி, மொபைல் பேங்கிங், மின்னஞ்சல் உள்ளிட்ட அத்தனை
இடங்களிலும் பாஸ்வேர்டை (கடவுச் சொல்) மாற்றிவிடுங்கள்.
தற்போது பெரும்பாலான நடவடிக்கைகளை ஸ்மார்ட்போன் வாயிலாக மேற்கொள்வதால் தொலைத்து விடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமானது.