சிகரெட்டை நிறுத்தினால் வரும் நன்மை அறிவோமா....
புகைப் பிடிப்பதாலும் புகையிலை தொடர்பான நோய்களாலும், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
ஒவ்வொரு சிகரெட்டும் வெளிவிடும் புகை, நுரையீரல், இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் மெதுவாக பாதிக்கிறது.
சிகரெட், பீடி, சுருட்டு, குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலை, கைனி என்று பல வடிவங்களில் புகையிலை பயன்பாடு உள்ளது.
இ- சிகரெட்டுகள், 'வேப்பிங்' சாதனங்கள் என்று அனைத்து தயாரிப்புகளிலும் நச்சு ரசாயனமான நிக்கோடின் உள்ளது.
குறைவாக புகைப்பிடிப்பது, நண்பர்களுடன் புகைப்பிடிப்பது, வார இறுதியில் மட்டும் புகைப்பிடிப்பது கூட காலப்போக்கில், நுரையீரல், ரத்த நாளங்களை பாதிக்கும்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலர் காலை நேர இருமல், வேலை செய்ய முடியாமல் சோர்வடைவது போன்றவைஆரம்ப கட்ட அறிகுறிகள்.
அறிகுறிகள், தீவிரமடையும் போது, நுரையீரலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காசநோய், மலட்டுத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியன புகையிலை ஏற்படுத்தும் பாதிப்புகள்.
புகையிலையை நிறுத்திய பின், 24 மணி நேரத்திற்குள் கார்பன் மோனாக்சைடு அளவு குறைகிறது; சில வாரங்களில், சுவாசம் மேம்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
மேலும் சில மாதங்களில் இருமல் குறைகிறது; சில ஆண்டுகளில் இதய நோய், புற்றுநோய் வருவதற்கான அபாயமும் குறையும் என கூறப்படுகிறது.