குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான முக்கிய உணவுகள் !

புரதம் நிறைந்த தயிர் மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இதில் அயோடின் உள்ளது. மூளையின் செயல்பாட்டுக்கும், செரிமானத்துக்கும் உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது; இது ஆரோக்கியமான மூளைக்கு இன்றியமையாதது.

நட்ஸ் மற்றும் விதைகளில் வைட்டமின் ஈ, இரும்பு, புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.

மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்புகள், அயோடின், துத்தநாகம் ஆகிய சத்துகள் மீனில் நிறைந்துள்ளன.

தினமும் ஒரு சிறிய கப் அளவுக்கு கீரை, காய்கறிகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகரிக்கும் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸ்.

புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டை, குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்தும் சக்தி கொண்டது.