போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு
உலகில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவர்களில், 18 வயதுக்கும் கீழானவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்தியாவில் ஒரு நாளுக்கு 28 மாணவர்கள் தற்கொலை செய்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. என்.சி.ஆர்.பி., எனும் தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, தற்கொலையில் தமிழகம் 2ம் இடத்திலுள்ளது.
கொரோனா பரவலுக்கு முன், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், தற்கொலை செய்து கொள்வோர் 9.8 % ஆக இருந்தனர். அது, தற்போது 12.4 % ஆக உயர்ந்துள்ளது ஆபத்தான ஒன்றாகும்.
மனித வாழ்வு குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் என்பதையும் நினைவுப்படுத்துகிறது.
தற்போது, இளம் வயதினர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வோர் அதிகரித்து வருகின்றனர்.
100ல், 10 பேராவது, போதை வஸ்துகளால் தற்கொலை செய்து கொள்வதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல, குடும்ப சூழல் காரணமாக, 47 % பேர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட நாள் நோய் தாக்கம் காரணமாக, 17 % பேர், தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.