அதிகரிக்கும் டெங்கு, ப்ளூ காய்ச்சல்... கை, கால், வாய் தொற்றுக்கு வாய்ப்பு

தற்போது டெங்கு, ப்ளூ காய்ச்சலுடன், கை, கால், வாய் பகுதிகளில் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நோயால், உள்ளங்கால், உள்ளங்கை மற்றும் வாய் பகுதிகளில் சிறிய கொப்பளங்கள் மற்றும் அரிப்பு ஏற்படும்.

இந்த நோய், ஒரு வாரத்தில் தானாகவே சரியாகும்.

சில வாரங்களில், கை விரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இழப்பு ஏற்படலாம். காலப்போக்கில் அது சரியாகி விடும்.

நேரடி தொடர்பு, இருமல் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் கழிவுகள் வாயிலாக, இது மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஒருசிலருக்கு, வீரியமிக்க காய்ச்சலுடன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.