இன்று சர்வதேச அகிம்சை தினம்!!

நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள்.

அவரது பிறந்த தினமான அக்., 2ம் தேதி, ஐ.நா., அமைப்பால் 'சர்வதேச அகிம்சை தினமாக' அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை போன்றவற்றின் முக்கியத் துவத்தை மக்களுக்கு உணர்த்து வதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் யாருக்கும் துன்பமோ, காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படக்கூடாது என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.

இத்தகைய சக்தி மிக்க அகிம்சா போராட்டத்தை தான் மகாத்மா காந்தி, இந்திய அரசியலில் மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையும், முன் மாதிரியும் மிகவும் அமைதியான, சகிப்புத்தன்மை உள்ள ஒரு உலகத்துக்கான காலமற்ற பாதையை வெளிப்படுத்துகின்றன.

இந்த பாதையில் சர்வதேச சமூகம், ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன், ஒரு குடும்பமாக வாழ வேண்டும்.