இரும்பு பாத்திர வகைகளும் பராமரிப்பும்!

இரும்பு பாத்திரங்கள் பொதுவாக வார்ப்பிரும்பு (Cast Iron) மற்றும் தூய இரும்பு (Pure Iron) என இருவகைப்படும்.

இரும்பு பாத்திரம் வளையும் தன்மை கொண்டது மேலும் உடையாது. ஆனால் வார்ப்பிரும்பு உடையும் தன்மை கொண்டது.

இரும்பு பாத்திரத்தில் விரைவாக சூடு ஏறும். வேகமாக சூடு குறையும் மாறாக வார்ப்பிரும்பு பாத்திரத்தில் மெதுவாக சூடு ஏறும் மற்றும் மெதுவாகவே சூடும் குறையும்.

வார்ப்பிரும்பு பாத்திரங்கள் சரியான விகிதாச்சாரப்படி உலோகங்கள் கலந்தால் எடை கூடுதலாக இருக்க வேண்டும். இரும்பு பாத்திரம் சற்று எடை குறைவாகவே இருக்கும்.

கடாய், தோசைக்கல், பணியாரக்கல், இட்லி தட்டு, வறுவல் பாத்திரங்கள், மற்றும் உருளி போன்றவை சமையலுக்குப் பயன்படும் பிரபலமான இரும்பு பாத்திரங்களின் வகைகளாகும்.

சமைத்த பின் கழுவி, காய்ந்ததும் லேசாக எண்ணெய் தடவி வைத்தால் துரு பிடிக்காது.

இரும்பு பாத்திரத்தில் சமைப்பதன் வாயிலாக, உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்

துருப்பிடித்த இரும்பு பாத்திரங்களை அவசியம் தவிர்க்க வேண்டும். துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இதில் சமைக்கக்கூடாது.