ஹைட்ராபேஷியல் செய்வது சருமத்திற்கு நல்லதா?

ஆரோக்கியமான சருமம் உடைய அனைவரும், 'ஹைட்ராபேஷியல்' சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை நீர்ச்சத்துடன் வைக்க செய்யப்படும் நவீன மருத்துவ சிகிச்சை முறை.

சருமத்தை பொலிவுடன் வைக்க, சில வகை காய்கறிகள் அல்லது பழங்களின் சத்துக்கள், தாதுக்களை தோலின் உட் புறத்தில் செலுத்துவோம்.

தோலின் வெளிப்புறத்தில, குறிப்பாக, முகத்தில் ஏற்படும் மரு, இயல்பைவிட அடர் நிறத்தில் தோல் மாறுவது, பொலிவிழந்த சருமம் ஆகியவற்றிற்கு ஹைட்ராபேஷியல் செய்யப்படுகிறது.

முகப்பரு, தோலில் ஏற்படும் மெல்லிய சுருக்கங்கள், முதுமையான தோற்றத்தை மாற்றுவது ஆகியவற்றிற்கு இச்சிகிச்சை பலன் தராது.

அழகு நிலையங்களில் குறைந்த செலவில் செய்யப்படும் ஹைட்ராபேஷியல் சிகிச்சை, முறையாக செய்யப்படுகிறதா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஹைட்ராபேஷியல் செய்வதற்கு முன், சருமம் சுத்தமாகவும், தொற்றுகள், பருக்கள் இல்லாமல் இருக்க வேண்டும். தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

சிகிச்சைக்குப் பின், புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, தோல் மருத்துவர் பரிந்துரை செய்யும் சன் ஸ்கிரீன், நீர்ச்சத்தை தக்க வைக்கும் கிரீம்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.