உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்பது நல்லதா?
உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சி, வாக்கிங் என முயற்சிப்பது வாடிக்கையாக உள்ளது. அதேவேளையில், பலரும் இதற்காக இரவு உணவை தவிர்க்கின்றனர்.
ஆனால், இரவு உணவு என்பது அன்றைய தினத்தில் உறங்கும் முன்பு, உடலுக்குத் தேவையான கலோரிகள், ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கான கடைசி வாய்ப்பாக உள்ளது.
எனவே, இரவு உணவை தவிர்ப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.
குறிப்பாக, இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதித்து, பசியை அதிகரிக்கக்கூடும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.
ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். இது நடுக்கம் அல்லது குறைந்த ஆற்றல் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்; தூக்கமும் பாதிக்கப்படும்.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவைத் தவிர்க்கும் போது, ரத்த சர்க்கரையின் அளவு குறையக்கூடும்.
வயதானவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, சரியான நேரத்தில் சரிவிகித உணவை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.