ஆபத்தில் இருப்பவர்களின் உயிரைக் காப்பாற்ற விருப்பமா... இதை அறிந்துகொள்ளுங்கள்!
மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, அடிப்படை முதலுதவிக்கான பயிற்சியை பொதுமக்களும் முறையாக கற்றுக் கொண்டால், ஆபத்தில் இருப்பவர்களை எளிதாக காப்பாற்ற முடியும்.
இப்பயிற்சிக்கு பேசிக் லைப் சப்போர்ட், அதாவது உயிர்காக்கும் அடிப்படை உதவி என்ற இந்தப் பயிற்சியில் , சிபிஆர் எனப்படும் இதய - நுரையீரல் மீட்பு உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.
மனித உடல் போன்ற டம்மி பொம்மைகளில், செய்யும் சிபிஆரின் தரம் துல்லியமாக அளவிடப்பட்டு எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என அறிந்து அதனை மாற்ற முடியும்.
பின்னர் ஒரு எழுத்துத் தேர்வையும் முடித்தால், 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' அங்கீகரித்த 2 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் பி.எல்.எஸ்., சான்றிதழ் வழங்கப்படும்.
பின்னர் ஒரு எழுத்துத் தேர்வையும் முடித்தால், 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' அங்கீகரித்த 2 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் பி.எல்.எஸ்., சான்றிதழ் வழங்கப்படும்.
பொது இடங்களில் யாரேனும் இதயத் துடிப்பின்றி மயங்கி விழுந்தால், இச்சான்றிதழ் இருக்கும் நபர் உடனடியாக செயல்பட்டு அவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்ற முடியும்.
வெளிநாடுகளில் குறிப்பிட்ட பணி செய்வோர், இத்தகைய சான்றிதழ்களை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பெறுவது கட்டாயம்.
காலை முதல் மாலை வரையிலான ஒருநாள் பயிற்சி தர, சென்னையில் பல நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.