மூட்டு வலியில் இருந்து விடுபட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?

பொதுவாக 60 வயது கடந்தவர்களுக்கு மூட்டு வலி, வீக்கம் ஏற்படும். அதற்கு எலும்பு சத்துக்குறைபாடு காரணமாகும்.

சிலர் வலி போக வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஸ்டீராய்டு மாத்திரைகள் சேர்த்து எடுத்துக்கொள்கின்றனர்.

அதை அதிகம் சாப்பிடுவதால் கால் வீக்கம் அடைந்து ரத்த ஓட்டம் பாதிக்கும் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு 'கோர் டி கம்பிரஷன்' சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீர் செய்யப்படும்.

இதில் குணமடையாதவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பின்னர் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

ஒருமுறை வயதானவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் 20 ஆண்டுகள் வரை பலன்கொடுக்கும்.

இளம் வயதிலிருந்தே சத்தான உணவுகள் சாப்பிட்டு, மூட்டு பலம் பெற உடற்பயிற்சி மேற்கொண்டால் மூட்டு பிரச்னைகளை தவிர்க்கலாம்.