இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா?
இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறுகினறனர்.
பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அதற்கான மற்ற பரிசோதனை முறைகளை பார்ப்போம்.
இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறிய 'டிரெட் மில் டெஸ்ட் பரிசோதனை செய்யப்படும்.
'டிரெட் மில்' பரிசோதனை என்பது, முதற்கட்டம் தான். இதில், ரத்தக்குழாய் அடைப்பு என, தெரிந்தால், அடுத்த கட்டமாக, 'குரோனரி ஆஞ்சியோ கிராம்' என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.
இதில், இதய பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதுதான், ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் முடிவான பரிசோதனை.
இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்று பெயர்.
இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது.