இன்சுலின் எதிர்ப்புக்கும் கல்லீரல் கொழுப்பிற்கும் தொடர்புண்டா?

இன்சுலின் எதிர்ப்பு என்பது உடலின் செல்கள் இன்சுலின் ஹார்மோனுக்குச் சரியாகப் பதிலளிக்காமல், குளுக்கோஸை உறிஞ்சத் தவறும்போது ஏற்படும்.

இதனால் தான் இன்சுலின் எதிர்ப்பு, கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு காரணமாகிறது. மேலும் அதிக உடல் எடை இல்லாவிட்டாலும், வளர்சிதை மாற்ற குறைபாடு சார்ந்த பாதிப்புகள் வரலாம்.

ஆரம்ப கால அறிகுறிகள் தொடர்ந்து சோர்வாக இருப்பது, சாப்பிட்ட உடனே வயிறு கனமான உணர்வு, அடிக்கடி வயிறு உப்புசம், வயிற்றில் அசவுகரியம் போன்றவை.

இந்த அறிகுறிகள் பெரும்பாலும் லேசானதாகவும், குறிப்பிட்ட நோயை குறிக்காத வகையிலும் இருப்பதால், இவற்றை நாம் எளிதில் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

இந்த பாதிப்பை கண்டறியாமல் விட்டால், இது படிப்படியாக கல்லீரல் சுருக்கம், கல்லீரல் செயலிழப்பு மற்றும் சில சமயங்களில் கல்லீரல் புற்று நோயாகக் கூட மாறலாம்.

சர்க்கரை நோய், பிபி, அதிக கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், தொப்பை உள்ளவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தில் மாற்றங்கள் மிகவும் அவசியம். தினமும் சர்க்கரை சேர்க்காத காபி 3 கப் குடிப்பது நல்ல பலன் தரும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மைதா போன்ற மாவுச் சத்து உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி, வாரத்திற்கு இரண்டு முறையாவது தசை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

தினமும் இரவில் 7 - 8 மணி நேரம் நன்றாக துாங்க வேண்டும்.

பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.