சர்க்கரை நோய் உள்ளதால் நரம்பு பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதா?

சர்க்கரை நோய்க்கு முறையான சிகிச்சை இல்லாவிட்டால் 30 முதல் 40 சதவீதம் நரம்பு பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையின் அளவால் நரம்புகள் பாதிக்கின்றன.

உடலிலேயே பாதத்தில் உள்ள நரம்புகள் தான் மிகவும் நீளமானவை என்பதால் பாதிப்பு அறிகுறிகள் முதலில் பாதத்தில் ஆரம்பிக்கின்றன.

கால், கைகளில் எரிச்சல், கால் விரல்களின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி, மரத்துப் போகுதல், எறும்பு ஊர்வது போன்ற உணர்ச்சிகள் இருக்கும்.

சிலருக்கு இந்த அறிகுறிகள் பாதங்களில் தொடங்கி மேல் நோக்கி தொடை பகுதி, கைகளுக்கும் பரவக்கூடும்.

தசைகளில் பலவீனம், சமநிலையின்மை போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

எனவே கால்களை தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சி மூலம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறைகளான நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரே சீராக வைத்துக்கொள்ள வேண்டும். நரம்பு தளர்ச்சி குறைபாடுகளை அறிய உதவும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உடல் பருமனை தடுக்க வேண்டும். உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் சிகிச்சை எடுக்க வேண்டும்.

புகைபிடித்தல், நிக்கோட்டின் பொருள்கள் பயன்பாடு சம்பந்தமானவற்றை உடனே நிறுத்த வேண்டும்.