பட்ஸ் கொண்டு அடிக்கடி காது குடைப்பவர்களா? ஆபத்தை அறியலாமா...
காது மெழுகு மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதை செருமன் என்றும் அழைக்கப்பத்துண்டு. அழுக்கு அசவுகரியமாக இருப்பதால் காது குடைவது உண்டு.
காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம், மேலும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் 'பட்ஸ்' மூலம் காதை அடிக்கடி சுத்தப்படுத்துகின்றனர்.
பட்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும், வீட்டு பெரியவர்களும் கூறுவது உண்டு. ஆனால் சிலருக்கு அது பழக்கமாகி, அடிக்ஷன் போல் தினமும் அப்படி குடைவதுண்டு.
காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே சிறிது சிறிதாக மாட்டிக்கொண்டு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் காது குடையும் போது, மெழுகு மேலும் உள்ளே தள்ளி, பெரிய அழுக்கு உருண்டைகளாக மாறிவிடக்கூடும்.
காதின் உள்ளே 23 மில்லி மீட்டர் தூரத்தில் சவ்வு இருந்தாலும், அவை மிகவும் மெலிதானது. மிக அதிக சத்தம் ஏற்பட்டாலேயே பாதிக்கக்கூடும்.
பட்ஸ் மட்டுமல்ல ஹேர்பின், சாவி, குச்சி ஆகியவற்றை வைத்து காதைக் குடைந்தால் கூட சவ்வு கிழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாம் வாயை நன்கு அசைத்தாலேயே சிறிதளவு அழுக்குகள் தானாகவே நகர்ந்து வெளியே வந்துவிடும்.
இதை தாண்டி காதில் அதிகப்படியாக சேர்ந்துள்ள மெழுகை நீக்க நினைத்தால் இஎன்டி மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம்.