மாற்ற முடியும்... ஜிம் ரோனின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்!
என்ன வேண்டுமென தெரிந்து, அதை அடைய வேண்டுமென்ற தீவிர ஆசை உங்களுக்கு இருந்தால், அதை அடைவதற்கான வழியையும் நீங்களே கண்டுபிடிப்பீர்கள்.
இலக்கை ஒரே இரவில் மாற்ற முடியாது, ஆனால் உங்களின் திசையை ஒரே இரவில் மாற்ற முடியும்.
பெறுவதை விட கொடுப்பதே சிறந்தது... ஏனெனில் பிறருக்கு கொடுப்பது என்பது பெறும் செயல்முறையைத் துவக்குகிறது.
பணத்தை விட நேரம் மதிப்புமிக்கது. நீங்கள் அதிக பணத்தைப் பெறலாம், ஆனால் அதிக நேரத்தை எப்போதும் பெற முடியாது.
வித்தியாசமானதைச் செய்யத் துணியாவிட்டால், சாதாரணமானவற்றுடன் நீங்கள் திருப்தி அடைய வேண்டியிருக்கும்.
உண்மையிலேயே ஒன்றை செய்ய விரும்பினால், அதற்கான வழியை எப்படியாவது நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். விரும்பாவிட்டால், ஏதாவதொரு சாக்குப்போக்கை கண்டுபிடிப்பீர்கள்.
எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக பேச வேண்டியிருக்கும்.