எலும்புகளை பலமாக்கும் பலாப்பழம்

பலாப்பழத்திலுள்ள வைட்டமின் சி,ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதில், நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது. குடல்களின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

இதிலுள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்னைகளுக்கும் நிவாரணம் தருகிறது.

ரத்தத்திலுள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து, உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைக்க உதவும்.

பலாப்பழத்திலுள்ள கரோட்டினாய்டு சத்து, டைப் 2 நீரிழிவு பாதிப்பு வராமல் பாதுகாக்கிறது.

காப்பர் சத்து இதில், நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கிறது.

வைட்டமின் பி6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்னைகளை குணப்படுத்தும். கார்போஹைர்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவும்.

இதிலுள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்னைகளையும் சரிசெய்கிறது.