இன்று தேசிய சுற்றுலா தினம்!
இந்தியாவில் தேசிய சுற்றுலா தினம் ஜன., 25 அன்று கொண்டாடப்படுகிறது.
இங்கு மலை, கடல், ஆறு, நீர்வீழ்ச்சி, அணைகள், தேசியப்பூங்கா, பாரம்பரிய, வரலாற்று கட்டடங்கள், கோயில்கள் என பல்வேறு முக்கிய இடங்கள் உள்ளன.
சுற்றுலா என்பது பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டு, அதாவது 1948ல் இருந்தே சுற்றுலா தினத்தை கொண்டாடுவது தொடங்கியது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, சுதந்திர இந்தியாவில் அதை ஊக்குவிக்கும் முயற்சியாக சுற்றுலாப் போக்குவரத்துக் குழு உருவாக்கப்பட்டது.
குழு அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1951 இல் கொல்கத்தா மற்றும் சென்னையில் சுற்றுலா தினத்தின் பிராந்திய அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2 சதவீதமும், வேலைவாய்ப்பில் 8.1 சதவீதமும் சுற்றுலாத்துறை பங்களிப்பதால் கிடைக்கிறது.
இந்த நாளில், நாடு முழுவதும் மற்றும் மாநில அளவில் பல வகையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டும். மேலும் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.