இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்
இந்திய சுதந்திரம்பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். ஆனாலும் 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தியின் நினைவு தினம் உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.
அவரின் பொன்மொழிகள் சில... நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதேபோல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
பணம் என்பது செய்த வேலையை அளப்பதற்கான ஒரு கருவியே. அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. தேவைக்கு மேல் பணம் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.
நாணயம் என்பது வெறும் காசுபணம் அல்ல. உழைப்பு தான் நாணயம். உழைக்கச் சக்தி உடையவனே உண்மையில் செல்வந்தன்.
நற்செயல்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் பலன் அளித்தே தீரும் என்பது நம் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும்.
வேகத்தால் சாதிப்பது ஒன்றும் இல்லை. தனது கடமையை நிதானமாகச் செய்வதால் மனிதன் நிறையத் தெரிந்து கொள்கிறான்.