ஜன.30 காந்திஜி நினைவு நாள்: இன்று தியாகிகள் தினம்

இந்திய சுதந்திரம்பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. சுதந்திரம் அடைந்த நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காந்தியின் நினைவு தினம் (ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.

உண்மையும், அகிம்சையும் ஒருவனிடம் இருந்தால், தலைநிமிர்ந்து வாழ முடியும். அவனுடைய முயற்சி அனைத்தும் வெற்றியாக முடியும். இதில் விதிவிலக்கே கிடையாது. - காந்திஜி

உழைப்பு இல்லாமல் சாப்பிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. உழைப் பவர் கைகளில் தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் ஒருபோதும் வாழ்வது கூடாது. - காந்திஜி

உடம்பில் இருக்கும் பலத்தைக் காட்டிலும், மனதில் இருக்கும் பயத்தைப் போக்குவது தான் மிகப் பெரிய பலம். - காந்திஜி