இன்று கல்வி வளர்ச்சி தினம்

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட அவரது சேவையைப் போற்றும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

2006-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

1903ல் விருதுநகரில் பிறந்தார். 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

பின்னாளில் மூன்று முறை (1954 - 1963) தமிழக முதல்வராக இருந்தவர் காமராஜர்.

ஏழை மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

இத்தினத்தில், மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.