இன்று அப்துல் கலாம் நினைவு தினம்

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவர் 2015 ஜூலை 27ல் மறைந்தார்.

உடலால் மறைந்தாலும் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார். அவரின் பொன்மொழிகள் சில...

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள்; இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல பலர் காத்திருப்பார்கள்.

உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், அதற்கு ஒற்றை மனதில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும்.

தோல்வி உங்களை எப்போதுமே துரத்தாது, உங்கள் வெற்றியின் இலக்கு வலிமையாக இருந்தால்.

உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.

நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நீ முன்னேறிக்கொண்டிருக்கும்போது, மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள். ஒரு வேளை நீ பின்னடைவை சந்திக்க நேர்ந்தால், யாராவது உனக்கு உதவுவார்கள்.