ஆசியாவின் தூய்மையான கிராமம் மாவுலிநாங்!
இந்தியாவில் உள்ள ஷில்லாங்கில் இருந்து சுமார் 79 கி.மீ தொலைவில், கிழக்கு காசி மலைகளில் மாவுலிநாங் கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் மொத்தம் சுமார் 90 குடும்பங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர்.
இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தினமும் காலையில் கிராமத்தை சுத்தம் செய்வதை தங்கள் முதல் கடமையாக குறிப்பாக இங்குள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்ய யாரும் தயங்குவதில்லை.
இந்த கிராமத்தில் சாலையின் ஓரங்களில் கூட நீங்கள் குப்பையை காண முடியாது ஏனென்றால் சாலையின் இரு ஓரங்களிலும் கழிவுகளை தனித்தனியாக தரம் பிரித்துக் கொட்டுவதற்கான மூங்கிலால் ஆன குப்பை கூடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவைகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், தரம் பிரித்து இயற்கை உரமாக்கி பயன்படுத்துகின்றனர். மற்றவற்றை வெளிப்பகுதிக்கு எடுத்து சென்று அழிக்கின்றனர்.
மாவுலிநாங் மலைகள், அருவிகள், காடுகள் இவை அனைத்தும் சூழ்ந்திருப்பதால், மிகச்சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.