இன்று உலக பெற்றோர் தினம்
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் போற்றுதலுக்குரியவர்கள்.
வயதான காலத்தில் அவர்களை அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பெற்றோர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'பெற்றோருக்காக இணைந்திருங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
தாய் - பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள். தந்தை - பத்து வயது வரை தன் தோளிலும், வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சிலும் நம்மை சுமப்பவர்.
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் போற்றுதலுக்குரியவர்கள்.
இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரைப் பாராட்டி, அவர்களுக்கு அன்பு, பாசம், கவனிப்பு மற்றும் மரியாதை ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதாகும்
நம் பெற்றோர் நமக்களித்த தியாகம், வளர்ப்பு, கவனிப்பு மற்றும் அசாதாரண ஆதரவு ஆகியவற்றிற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை மகிழ்விக்க மிகவும் அவசியம்.