இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

உலகில் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். உலகில் 10ல் ஒரு குழந்தை, தொழிலாளியாக உள்ளது.

இதில் 7.2 கோடியுடன் ஆப்ரிக்கா முதலிடத்திலும், 6.2 கோடியுடன் ஆசியா பசிபிக் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'முன்னேற்றம் தெளிவாக உள்ளது, ஆனால் இன்னும் செய்ய வேண்டியது இருக்கிறது: முயற்சிகளை விரைவுபடுத்துவோம்.' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

பல குழந்தைக்கு உணவும் கிடைப்பதில்லை. இவர்கள் குழந்தைகளாகவே இருப்பதற்கு கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும்.இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமுதாயம் உருவாகும்.