சுற்றுலா சென்றால் முதியோருக்கு மன அழுத்தம் குறையும்!

இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்பது முதியோரின் பயண ஆசை.

தங்களை சார்ந்திருக்கும் முதியோருக்கு நல்ல உடை, உணவு, தங்க இடம் மட்டும் கொடுத்தால் போதாது. வெளியிடங்களுக்கும் அவ்வப்போது அழைத்து செல்ல வேண்டும்.

பயணங்கள் என்பது முதியோர்களை பொறுத்த வரையில் ஆடம்பரமானது அல்ல; ஆரோக்கியம், மனநலத்துடன் மிகவும் தொடர்புடையது என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயணம் என்பது, முதியோரின் மனநலனை மேம்படுத்தவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

50 - 60 வயது வரை பிள்ளைகளுக்காக ஓடியவர்கள், அதன் பின்னரே தங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற விரும்புகின்றனர்.

ஒரு சில முதியோருக்கு சினிமாவுக்கு செல்வது, சில முதிய பெண்களுக்கு ஷாப்பிங் செல்வது, சிலருக்கு ஆன்மிக ரீதியாக சுற்றுலா செல்வது பிடிக்கும்.

அவ்வாறு, வெளியில் செல்லும் போது, அவர்களிடம் பேரன், பேத்திகளுக்கு வாங்கவும், அவர்களுக்கு பிடித்ததை வாங்கவும், பணம் கொடுக்க மறந்து விடாதீர்கள்!