இன்று உலக பிக்னிக் தினம்
பரபரப்பான வாழ்க்கையிலிருந்து மனதை மகிழ்ச்சியாக வைக்க குடும்பம், நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு 'பிக்னிக்' செல்வது அவசியம்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் உலக பிக்னிக்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'பிக்னிக்' என்றாலே வேடிக்கை, சுத்தமான காற்று, சூரிய ஒளி, இயற்கை சூழல்தான் நினைவுக்கு வரும்.
மேலும் அவசர வாழ்க்கையில் இருந்து சிறிது நேரம் விலகி, இயற்கையோடு இணைந்து இருப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும், புத்துணர்ச்சியாக் இருக்க செய்யும்.
பிக்னிக் செல்பவர்களுக்கு இனிமையான அனுபவம் அளிக்கும். மேலும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சிரித்து, விளையாடி மகிழ ஒரு வாய்ப்பாகும்.
"இயற்கையில் எளிய தருணங்களை ரசிப்பது" என்பது இந்தாண்டு மையக்கருத்து.