இன்று உலக பிக்னிக் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ல் உலக பிக்னிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'பிக்னிக்' என்றாலே வேடிக்கை, சுத்தமான காற்று, சூரிய ஒளி, இயற்கை சூழல் தான் நினைவுக்கு வரும்.

பரபரப்பான வாழ்க்கையிலிருந்து மனதை மகிழ்ச்சியாக வைக்க குடும்பம், நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு 'பிக்னிக்' செல்வது அவசியம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அவசர வாழ்க்கையில் இருந்து சிறிது நேரம் விலகி, இயற்கையோடு இணைந்து இருப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும், புத்துணர்ச்சியாக் இருக்க செய்யும்.

மேலும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், கடற்கரைகள் அல்லது அருகிலுள்ள பூங்காக்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாட்டுகள் விளையாடலாம்.

பிக்னிக் செல்பவர்களுக்கு இனிமையான அனுபவம் அளிக்கும். மேலும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சிரித்து, மகிழ ஒரு வாய்ப்பாகும்.