இன்று சர்வதேச யோகா தினம்…
2014ல், ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன.
பிறகு ஐக்கிய நாடுகள் சபையால் 21 ஜூன் 2014 அன்று முதல் சர்வதேச யோதா தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தீம் “சுயம் மற்றும் சமூகத்திற்கான யோகா” என்பதாகும். சுய மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கிய பங்கை விரிவுப்படுத்த வலியுறுத்துகிறது
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை, தினசரி ஏற்படும் சத்தம், புகை மாசு, மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்டவை, நம் உடல் நலனை கெடுக்கின்றன.
தினமும் குறைந்தது பத்து முதல் 20 நிமிடகள் வரை, ஒவ்வொருவரும் யோகா பயிற்சி மேற்கொண்டால் நல்ல மன நலனை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குறிப்பாக யோகா குழந்தைகளின் அறிவுக்கூர்மை, கவனம், அமைதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் அகியவற்றை அதிகரிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவு உண்ட மூன்று மணி நேரம் கழித்து யோகாசனம் செய்யலாம்.
இறுக்கமில்லாத, தளர்வான பருத்தி ஆடை, வியர்வை உறிஞ்சும் பனியன் அணியவேண்டும்.