மணல், கடல், பனி மூன்றும் ஒன்றுகூடும் ஜியோபார்க்!

ஜப்பானில் உள்ள சானின் கைகன் ஜியோபார்க்கில் மணல், கடல், பனி மூன்றும் ஒன்றுகூடும் அரிய நிகழ்வை நீங்கள் காண முடியும்.

இந்த இடத்தை 2008ல் ஜப்பானிய ஜியோபார்க் என்றும், 2010ல் யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் அரிதாக கண்டறியப்படும் புவியியல் அமைப்புகள் கொண்ட இடத்துக்கு தான் ஜியோபார்க் என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

ஜப்பானில் உள்ள கியோட்டோவின் கியோகாமிசாகி கேப் பகுதியிலிருந்து டோட்டோரியில் அமைந்துள்ள மேற்கு ஹகுடோ கைகன் கடற்கரை வரை நீண்டுள்ளது.

இந்த ஜியோபார்க், ஜப்பான் கடலின் உருவாக்கம் தொடர்பான பல்வேறு புவியியல் தளங்களைக் கொண்டுள்ளது. இது ரியா வகை கடற்கரைகள், மணல் திட்டுகள் , மணல் குவியல்கள், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் போன்ற புவியியல் அம்சங்களை ஒரே இடத்தில் உள்ளது.

இந்த பன்முகத்தன்மை காரணமாக, ஜியோபார்க் சூடோலிசிமாச்சியோன் ஆர்னட்டம், ரான்குலஸ் நிப்போனிகஸ், சிகோனியா பாய்சியானா போன்ற அரிய தாவரங்களுக்கு தாயகமாக உள்ளது.

இது சுமார் 400,000 மக்கள்தொகை கொண்ட மூன்று நகரங்கள் மற்றும் மாகாணங்களை உள்ளடக்கியது. இப்பகுதி மூன்று பெரிய பூகம்பங்களை சந்தித்ததால், பேரழிவு தொடர்பான இடங்களும் இங்கு உள்ளன.