இன்று உலக பெண் அதிகாரிகள் தினம்

ஐ.நா., சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24ல் சர்வதேச பெண் அதிகாரிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினம் அதிபர், பிரதமர், அமைச்சர், எம்.பி., துாதர், சிவில் சர்வீஸ் என அரசின் உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்துகிறது.

'தலைமையில் சமத்துவம், முன்னேற்றம் மற்றும் அமைதியை நாடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உயர் பதவிகளில் பெண்கள் இருக்கும்போது, எளிய மக்கள், சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.

193 ஐ.நா, உறுப்பு நாடுகளில் 28 நாடுகளில் தான் பெண்கள், தலைவர்களாக உள்ளனர்.

பெண்களின் பங்களிப்பை உயர் அமைப்புகளில் அதிகரிக்க செய்யவும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் இந்நாள் உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது.