இன்று உலக மூளைக்கட்டி தினம்!

மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக்கட்டி பாதிப்பு ஏற்படுகிறது.

இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மூளைக் கட்டி என்பது மூளைக்குள் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும்.

குமட்டல், பார்வை பிரச்னைகள், தொடர் தலைவலி, அறிவாற்றல் மாற்றங்கள், பேசுவதில் சிரமம் ஆகியன இதன் அறிகுறிகளாகும்.

மரபணு, பரம்பரை காரணிகள், கதிர்வீச்சு வெளிப்பாடு, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், வைரஸ் தொற்றுகள் உள்ளிட்ட காரணங்களாலும் வரலாம்.

மூளையில் உருவாகும் அனைத்து கட்டிகளும் மரணம் ஏற்படுத்த கூடியவை அல்ல. பல காரணங்களால் மூளையில் உருவாகும் கட்டிகளில் சில புற்றுநோய் கட்டிகளாக இருக்கும்.

இதில் தீங்கு விளைவிப்பது மற்றும் தீங்கற்றது என்ற இருவகை கட்டிகள் உருவாகின்றன. அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்.