தேர்தலுக்காக கச்சத்தீவை கையில் எடுத்ததா பா.ஜ., : நிர்மலா சீதாராமன் விளக்கம்

கச்சத்தீவு, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பால்க் ஜலசந்தியில் அமைந்துள்ள மக்கள் வாழாத தீவு.

சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தீவு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருகிறது.

மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியாவும் இலங்கையும் 1974ல் ஒரு கடல் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி தீவை இலங்கைப் பகுதிக்கு ஒதுக்கியது.

கடந்த வாரம் கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தவறாகக் கையாண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.

கச்சத்தீவு குறித்து நேரு எழுதிய கடிதத்தில், 'அது ஒரு தொல்லை. சீக்கிரத்தில் கையைவிட்டுப் போனால் நிம்மதி' என்கிறார். அந்தக் கடிதத்தைக் கூட நாங்கள் காட்டினோம். - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

'அது சிறிய கல்பாறை' என இந்திரா காந்தி சொல்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. - நிர்மலா சீதாராமன்

கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக திமுக, அதிமுக, மீனவா்கள் மற்றும் தனி நபா் ஒருவா் அளித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் உள்ள மனுக்கள் விசாரணைக்கு வரும்போது பாஜவின் கருத்தை சொல்வதாக தற்போது நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.