ஏன் சாப்பிட்டவுடனே சைக்கிளிங் செய்யக்கூடாது?

உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது.

சைக்கிளிங் செய்யும்போது நுரையீரல் ஆக்ஸிஜனை அதிகமாக எடுப்பதால், இதயத்தின் ஆரோக்கியமும் நுரையீரலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

இதுதவிர உடலின் செல்களுக்கும் ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்கும்; ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

சாப்பிட்டு 1.5 மணி நேரம் கழித்துதான் சைக்கிளிங் செய்ய வேண்டும்.

அதேவேளையில், சாப்பிட்ட உடனே சைக்கிளிங் செய்தால், உடலின் ரத்த ஓட்டமானது கால்களுக்கும் குறிப்பாக தொடைகளுக்கும் அதிகமாக பாயக்கூடும்.

அப்போது, உணவு செரிமானத்தில் பிரச்னை உண்டாக வாய்ப்புள்ளது.

அதிகாலை நேரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும் என்பதால் இது சைக்கிளிங் செய்ய உகந்த நேரம்.