சிறு வயது உடல் பருமன்...ஆரோக்கியமான உணவு அடித்தளம்...
மரபியல் காரணிகள், உணவின் அளவு, பெற்றோரின் கவனிப்பு, உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும். உயரத்தைவிட உடலின் எடை அதிகமாக இருந்தால் அதுவே 'ஒபிசிட்டி' எனப்படுகிறது.
சிறு குழந்தைகளாக இருந்தபோது மேற்கொண்ட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் வளர்ந்த பிறகு தொடர்வதில்லை.
இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல், வீடியோ கேம்ஸ் என வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பதும், உடல்பருமனுக்கு காரணமாக அமைகிறது.
அதிகரிக்கும் உடற்பருமனானது, அவர்களுடைய மேற்படிப்பு, பணி, என்று எதிர்காலத்திலும் அவர்களுக்கு பிரச்னைகளைக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இதர உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வர வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளின் உடல் எடை அதிகமாகிறது என்று தெரிந்தால் முறையான உணவுப் பழக்கம், சரியான நேரத்தில் உண்பது, உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
உடற்பயிற்சி செய்தல், தன் வயது பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் ஆகியவற்றை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவு முறையே இதற்கான தீர்வு என்பதை மறக்கக் கூடாது.