முடக்கி போடும் மூட்டு வலி… போக்க சில டிப்ஸ்!
கால் முட்டி, தசைகளில் உண்டாகும் வலி, வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக, கம்ப்யூட்டர் முன்பு நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்பவர்களை அதிகம் பாதிக்கிறது.
ரத்த நாளங்கள் சுருங்குவதால், ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், மூட்டுகளில் வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால், நீரிழப்பால் உண்டாகும் மூட்டுகளின், இறுக்கத்தை தடுக்கலாம்.
மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகைகளான காலணிகளை அணிவது, உடலின் மேல் பாகத்தில் அதிக கனமான எடை கொண்ட பொருட்களை துாக்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பிசியோதெரபி பயிற்சி, பராபின் குளியல், ஹீட்டிங் பேட் ஆகியவற்றின் வழியாகவும் வலியை குறைக்க முடியும்.
மூட்டு வலி இருக்கும் போது சுடு தண்ணீர், உப்புக்கல் ஒத்தடம் தரலாம். படுக்கப் போகுமுன் கிரிப் பேண்டேஜ் சுற்றிக்கொண்டு படுக்கலாம்.
ஒரே இடத்தில் உட்காராமல், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, 50 அடிகள் நடப்பது, உடல் சுறுசுறுப்பாக, தசைகள் இறுக்கம் இன்றி இருக்க உதவும்.