அல்சரின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் சில

அல்சர் அல்லது வயிற்றுப் புண்ணை, தொடர் சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம்.

சில சமயங்களில் அல்சர்கள் வயிறு/சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும்.

இதனால் தீவிரமான வலி ஏற்படும். சிலருக்கு வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும்.

ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.

உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா ஆகியவற்றை தவிர்க்கவும்.

உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.

குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து, கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது.