துரித உணவு தவிர்ப்போம் ஆரோக்கியம் பேணுவோம்!

வயிற்றுப்புண் கவனிக்காமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் புற்றுநோயாக மாறக்கூடும். மேலும் வீட்டில் புற்றுநோய் இருந்தால் மரபணு ரீதியாக மற்றவர்களுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம்

அதிகரித்து வரும் புற்றுநோய்களில் வயிற்றுப் புற்றுநோயும் ஒன்று. ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாமல் இருப்பதால், பலர் தாமதமாகவே மருத்துவரை அணுகுகின்றனர்.

காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள், எளிதில் செரிக்கும் உணவுகள், அதிக காரம், உப்பு, எண்ணெய் இல்லாத உணவுகள் புற்றுநோயை தடுக்க வல்லது.

தாவர உணவுகள் மட்டும் உண்பவர்க்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

40 வயதுக்கு மேலானோர் ஆண்டுக்கொருமுறை எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதிக உப்பு, காரம், எண்ணெய், புகை சார் உணவு, புகையிலை, சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கண்ட கண்ட தலைவலி, வலி மாத்திரைகள் சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இரவு வேலை செய்பவர்கள், அதிகம் 'பாஸ்ட் புட்' என்னும் துரித உணவு சாப்பிடுவர். அவற்றை தவிர்த்து முடிந்தளவு வீட்டில் உள்ள எளிய உணவுகளை உண்ணவும்.